யாழ்.நாவலர் வீதியில் ஹயஸ் – பஸ் விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதுன்டதில் வானத்தின் பாகங்கள் சேதமடைந்ததுள்ளதுடன் ஒரு சிலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன.

CTB

நேற்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்து நாவலர் வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த வேளை வைமன் வீதியுடாக வந்துகொண்டிருந்த ஹயஸ் வாகனத்துடன் மோதுன்டு விபத்து இடம்பெற்றுள்ளது.

hiars

விபத்து இடம்பெற்ற சமயம் அவ்வீதியில் போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் இருந்ததோடு பொலிஸ் உயர் அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார். இறுதியில் பொலிஸார் பேருந்தையும் ஹயஸ் வாகனத்தையும் யாழ் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Related Posts