Ad Widget

யாழ். சாலைக்கு சாரதிகள் பற்றாக்குறை; சாலை முகாமையாளர்

யாழ். சாலைக்கு சாரதிகள் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவி வருவதாக சாலை முகாமையாளர் குலபாலசெல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இ.போ.சயின் யாழ். சாலைக்கு சாரதிகள் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவி வருவதுடன் பேருந்துகளும் போதியளவு இன்மையால் சேவையினை சீராக மேற்கொள்ள முடியாது உள்ளது.

அண்மையில் யாழ். சாலைக்கு என 10 சாரதிகளும் 10 காப்பாளர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

யாழ். சாலைக்கு தற்போது 68 சாரதிகள் தேவையாக இருந்த நிலையில் 10 சாரதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் யாழ். மாவட்டத்திற்கும் மற்றும் வெளிமாவட்டங்களுக்கும் முழுமையான சேவையினை வழங்குவதற்கு எமக்கு 89 பேருந்துகள் தேவையாக உள்ளது.

எனினும் தற்போது உள்ளவற்றில் 18 பேருந்துகள் எஞ்சின் இல்லாத நிலையிலும் 63 பேருந்துகள் ஓடக் கூடிய நிலையிலும் உள்ளன. இந்த 63 பேருந்துகளைக் கொண்டே தற்போது சேவையினை வழங்கி வருகின்றோம்.

இன்னும் சேவை ஈடுபடுத்தப்பட கூடிய பல பகுதிகளுக்கு இ.போ.ச பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். எனினும் மேலதிகமாக பேருந்துகள் யாழ். சாலைக்கு வழங்குவதாக போக்குவரத்து அமைச்சு உறுதியளித்துள்ளது.

அவ்வாறு போதியளவு பேருந்துகள் கிடைத்தவுடன் முழுமையான சேவையினை யாழ். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிக்கும் வழங்குவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts