Ad Widget

யாழ். இளைஞர் சேவை மன்றப் பணிப்பாளர் பதவி நீக்கம்?

dismis-jobயாழ்.இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் ரி.ஈஸ்வரராஜா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினாலே இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் சேவை மன்றத்தின் வேலைத்திட்டங்களிற்கு நிறுவனங்களினால் கொடுக்கப்படும் நிதியினை மோசடி செய்தார் மற்றும் அலுவலக வேலைகளில் அக்கறையின்றி தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டார் போன்ற காரணங்களுக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னரே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் யாழ்.கண்டி வீதியிலுள்ள இளைஞர் சேவைகள் மன்றத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பணிப்பாளர் கலந்துகொள்ளாததினைத் தொடர்ந்தே மேற்படி விடயம் வெளியில் வந்துள்ளது.

Related Posts