யாழில் 496.4 மில்லிமீற்றர் மழை

யாழ். மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 496.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன், திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி 120.3 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது. இதுவே இந்த வருடத்த்தில் அதிகூடியளவில் மழை பெய்த நாளாகும்.

அத்துடன் கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குரிய மழைவீழ்ச்சி 80.6 மில்லிமீற்றரும் 2013ஆம் ஆண்டு 19.1 மில்லிமீற்றரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளும் நவம்பர் மாதத்துக்குரிய மழைவீழ்ச்சி குறைவடைந்திருந்ததாகவும் இந்த வருடம் நவம்பர் மாதத்துக்குரிய மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts