Ad Widget

யாழில் 450,132 பேர் வாக்களிக்கத் தகுதி – அரச அதிபர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 450,132 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

நாடுபூராகவும் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில் அரச அதிபர் வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தை பொறுத்த வரையில் 450,132 வாக்காளர்கள் தேர்தலிலே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு இதற்காக யாழ்.மாவட்டத்திலே 526 வாக்களிப்பு நிலையங்களும் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

மேலும் இந்த வாக்களிப்பு நடவடிக்கையின் ஊடாக வாக்குகள் எண்ணும் நடவடிக்கையும் கூட இந்த முறையும் யாழ்.மத்திய கல்லூரியில் 44 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டு அதனூடாக மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

யாழ்.மாவட்டத்திற்கான அஞ்சல் மூலமான வாக்காளர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்திலே அவர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கு மிக விரைவில் கிடைப்பதற்கான ஏற்பாடுகளும் தபால் அதிபர் மூலமான கலந்துரையாடலிலே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

தற்போது யாழ்.மாவட்டத்திலே தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் தேர்தல் தொடர்பாக முறையிட யாழ்.மாவட்டத்தில் 5 முறைப்பாட்டு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்.மாவட்ட செயலகம், பருத்தித்துறை,வேலணை,சாவகச்சேரி,சண்டிலிப்பாய் போன்ற பிரதேச செயலக பிரவுகளிலே தேர்தல் தொடர்பாக முறையிடலாம்.

மேலும் இந்த முறைப்பாட்டு நிலையங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களும்,அரச உத்தியோகத்தர்களும் இணைந்து கடமையாற்றவுள்ளதோடு ஜனாதிபதி தேர்தலை சுமூகமாகவும்,நியாயமாகவும் நடாத்த அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts