Ad Widget

யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மாவட்ட செயலகத்தினால் உதவிகள்

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த அடை மழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்ட மக்களிற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அனர்த்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தினால் அவசரகால உதவிகள் வழங்கப்பட்டதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் மற்றும் தரப்பாள்,பாய், பால்மா வகைகள், போர்வைகள் ஆகியன அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அனர்த்த மத்திய நிலையத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்டதுடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏனைய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருள்கள் ஒருவார காலத்திற்கு வழங்கப்பட்டன.

மேலும் தொடர்ச்சியான நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு நிலமைகளுக்கு ஏற்றவாறு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க யாழ். மாவட்ட செயலகம் தயாராகவுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த அவசர நிவாரண சேவையில் உணவு அல்லாத நிவாரண சேவைகள் மற்றும் பொருட்களில் யு.என்.எச்.சி.ஆர், சேவாலங்கா,வேல்ட்விசன் மற்றும் சாந்திகம் ஆகிய நிறுவனங்களும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளன என தெரிவித்த அரச அதிபர் இதேபோல் ஏனைய நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளும் இந்த நிறுவனங்கள் போல அவசரகால உதவிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts