யாழில் விபத்து; காயமடைந்தவர்களை காணவில்லை!

யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இன்று அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த வடிரக வாகனம் வீதியின் அருகிலுள்ள மதிலுடன் மோதியதாலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

vadi-acci

எனினும் இவ் விபத்து இடம்பெற்று 8.30 மணிவரை யாழ். போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படவில்லை எனவும் விபத்தில் காயம்டைந்தவர்கள் தொடர்பில் இதுவரை எந்த விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.

இவ்விபத்தின் தடையங்களை வைத்து பார்க்கும் போது வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்திருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டனர்.

இதேவேளை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் இதுவரை யாழ்.போதனாவைத்திய சாலையில் அனுமதிக்கப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts