Ad Widget

யாழில் சிறுவர் பாராளுமன்றம்

children-parlementசிறுவர் உரிமைகள் மீறப்படும் பொழுது சிறுவர் உரிமைகளை பேணுவது தொடர்பான ‘சிறுவர் பாராளுமன்றம்’ நேற்று வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகமும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று மதியம் 2.30 மணியளவில் இந்த சிறுவர் பாராளுமன்றம்த்தினை நடத்தினர்.

இந்த பாராளுமன்றத்தில் சிறுவர் சட்டம் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பாக பாடசாலை மாணவர்கள் சிறுவர் பாராளுமன்றத்தில் விவாதித்தனர்.

மாகாண மட்டத்தில் சிறுவர் உரிமைகள் மற்றும் சட்டங்கள் தொடர்பான போட்டிகள் நடாத்தப்பட்டு, அப்போட்டிகளில் சிறந்த பேச்சாளர்கள் தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், இன்று பாராளுமன்றத்தில் சிறுவர் சட்டம் தொடர்பாக மாணவர்கள் விவாதித்தனர்.

சிறுவர் உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் எவ்வாறா சட்டங்கள் அமுல்படுத்தப்படல் வேண்டும், உரிமைகளை எவ்வாறு வென்றெடுக்க சட்டத்தில் எவற்றினை நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற விடயங்களை சுட்டிக் காட்டியதுடன், பேச்சாற்றல் மூலம் தமது உரிமைகளையும் மாணவர்கள் வென்றெடுத்தனர்.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக லீட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் தே. நரேந்திரன் யாழ். மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் கு.கௌதமன் ஆகியோர் உட்பட யாழ். போதனா வைத்தியசாலை உளநல மருத்துவர் எஸ்.சிவயோகம் மற்றும் வளவாளர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts