யாழிலிருந்து திருச்சிக்கு விமான சேவைகள்

யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க விமான நிறுவனமொன்று முன்வந்துள்ளது.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட விமான நிறுவனமான பிட்ஸ் எயார் தனியார் விமான நிறுவனமே இந்த விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

பிட்ஸ் எயார் தனியார் விமான சேவை யாழ்ப்பாண விமான நிலையத்தில் இருந்து விரைவில் இந்த சேவைகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விமான சேவையை முன்னெடுப்பதற்கான பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Related Posts