Ad Widget

மூவி­னத்­தையும் சரி­நி­க­ராக கொள்ளும் ஒரு­வ­ருக்கே ஆத­ர­வ­ளிக்க முடியும்

நிறை­வேற்று அதி­காரம் ஒழிக்­கப்­ப­டு­வ­துடன் , சிங்­கள– பௌத்­தத்தை மட்டும் மையப்­ப­டுத்­தி­யுள்ள அர­சி­ய­ல­மைப்பு மாற்­றப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும் என வலி­யு­றுத்­தியுள்ள சிவில் சமூ­கத்தின் தலை­வரும் மன்னார் மறை­மா­வட்ட ஆய­ரு­மான இரா­யப்பு ஜோசப்,ஜன­நா­யக ரீதியில் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு, மூவி­னத்­தையும் சரி­நி­க­ராகக் கருத்தில் கொள்ளும் ஒரு­வ­ரையே ஆட்­சிப்­பீ­டத்தில் அமர்­வ­தற்கு ஆத­ர­வ­ளிக்க முடியும் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

mannar-ayar

அத்­துடன் தமிழர் தரப்பு தொடர்ந்தும் ஆட்­சியில் உள்ள அர­சாங்­களில் ஒட்­டுண்ணித் தாவ­ரங்கள் போன்றே இருக்­க­ வேண்டும் என்ற கரு­து­நி­லையை தொடர்ந்தும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்ற அர­சியல் யதார்த்­தத்தை புரிந்து கொள்­ள­வேண்டும் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு இது­வ­ரையில் எவ்­வி­த­மான முடி­வு­க­ளையும் எடுக்­காத நிலையில் ஆளும் எதிர்த்­த­ரப்­புக்கள் பல்­வேறு முனைப்­புக்­களில் கடும் பிர­யத்­த­னத்­துடன் காய்­ந­கர்த்­தல்­களைச் செய்து வரு­கின்­றமை தொடர்பில் வின­வி­ய­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

யுத்தம் நிறை­வ­டைந்த சூழலில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் தோல்­வி­கண்­டுள்­ளது. இந்­நி­லையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் வாழ்­வா­தாரம் உட்­கட்­ட­மைப்பு என்­பன மீளவும் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டாது அவர்­களின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அர­சியல் ரீதி­யான எதிர்­கா­லமும் ஐயப்­பா­டான சூழ்­நி­லை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான நிலை­மையில் தான் ஜனா­தி­பதி தேர்­த­லொன்று நடத்­தப்­ப­டு­வ­தற்­கு­ரிய முனைப்­புக்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக இங்­குள்ள அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் ஆட்­சி­யா­ளர்கள் சிங்­க­ளத்­திற்கும் பௌத்­தத்­திற்கும் மட்­டுமெ முக்­கி­யத்­து­வத்தை அளிக்­கின்­றார்கள். ஏனைய இனங்­க­ளையோ அல்­லது மதத்­த­வர்­க­ளையோ கருத்­தி­லெ­டுப்­பது கிடை­யாது. அவர்­க­ளுக்­கு­ரிய மரி­யா­தை­க­ளையும் வழங்­கு­வதும் கிடை­யாது. ஆகவே சிங்­க­ளத்­தையும் பௌத்­தத்­தையும் முதன்­மைப்­ப­டுத்­தி­யுள்ள அர­சி­ல­மைப்பு மாற்­றப்­பட்டு ஜன­நா­யக அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். இதன் மூலம் இந்த நாட்­டி­லுள்ள மூவ­னங்­களும், மதங்­களும் சரி­நி­க­ராக மதிக்­கப்­படும் நிலைமை உரு­வாக்­கப்­பட வேண்டும்.

அதே­நேரம் நிறை­வேற்று அதி­கார முறை­மை­யினால் தனியே ஒரு­வ­ரி­டத்தில் அதி­கா­ரங்கள் குவிந்த கிடக்­கின்­றன. இதனால் அனைத்து நிர்­வாகக் கட்­ட­மைப்­புக்­களும் சுயா­தீ­ன­மாக செயற்­ப­ட­மு­டி­யாத நிலைமை உருப்­பெற்று குடும்ப ஆட்­சி­யொன்று நடை­பெ­று­வ­தற்கு வழி­ச­மைத்­துள்­ளது. இத்­த­கைய கட்­ட­மைப்பு மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும். ஆதா­வது நிறை­வேற்று அதி­காரம் முற்­றாக ஒழிக்­கப்­பட்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­காரம் வழங்­கப்­ப­டு­வ­துடன் நிர்­வாக ரீதி­யான சுயா­தீ­னமும் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

இவற்றை கருத்தில் கொண்டு உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­கு­ரிய பரிந்­து­ரை­க­ளையும் உறுதி மொழி­க­ளையும் வழங்கும் ஒரு­வ­ரையே அடுத்து ஆட்­சிப்­பீ­டத்தில் அமர்­வ­தற்­கு­ரிய ஆத­ரவை தமிழ்த் தரப்பு வழங்க முடியும். தமிழ்த்தரப்பைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் வேறுபட்ட தலைமைகளில் கீழ் மாறுபட்ட அனுபவங்களைக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே தமிழ்ர்கள் தொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசாங்கங்களில் ஒட்டுண்ணித் தராவரங்கள் போன்று இருக்க வேண்டும் என்ற கருதுநிலையை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதனால் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காது என்ற அரிசியல் யாதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Related Posts