Ad Widget

மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்த 36 தமிழ் யுவதிகள் வெளியேறினர்!

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்த 36 தமிழ் யுவதிகள் நேற்று வெளியேறினர்.

இப் பயிற்சிநெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில் நடைபெற்றது.

women-tamil-army

இவ்விழாவில், பிரிகேடியர் சண்முகநாதன், பிரதம அதிதியாக கலந்துகொண்டு இராணுவ வீராங்கணைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இப்பயிற்சிநெறியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மண்டூரைச் சேர்ந்த தெய்வேந்திரன் ரஞ்சிதா என்ற யுவதி கௌரவிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாணத்தில், திருகோணமலையில் 16 பேரும், மட்டக்களப்பில் 15 பேரும், அம்பாறையில் 5 பேரும் இப்பயிற்சிநெறியை நிறைவு செய்துள்ளனர்.

இவர்களுள் அம்பாறையைச் சேரந்த மு.றிசானா என்ற இஸ்லாமிய யுவதியும் உள்ளடங்குகிறார்.

கிழக்கு மாகாணத்தில் புதிதாக இராணுவத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுள், முதலாவதாக பயிற்சிநெறியை நிறைவுசெய்தவர்கள் இவர்களென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts