Ad Widget

முன்னாள் போராளிகளை பதிவு செய்யும் இராணுவம்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களை இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதிக் கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து சரணடைந்த போராளிகளை அரசாங்கம் தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்திருந்தது.

சில வருடங்கள் புனர் வாழ்வளிக்கப்பட்ட பின்னர் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் இவர்களின் அன்றாட நடவடிக்கைகள் தொடர் கண்காணிப்பிலேயே இருந்து வருகின்றனர்.

இன்நிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் எந்தவித காரணங்களும் இன்றி கைது செய்யும் நடவடிக்கைகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் நிலையில்,

மீண்டும் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று முன்னாள் போராளிகளை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் அச்சமடைந்துள்ளனர்.

மாவீரர் வாரம் நெருங்கும் வேளையில் நேற்றைய தினம் மன்னார் – வெள்ளாங்குளம் கணேசபுரம் என்ற பகுதியில் வீடொன்றில் புகுந்த ஆயுததாரிகள் முன்னாள் போராளி ஒருவரை சுட்டுக் கொலை செய்துள்ளமையால் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மத்தியில் பெரும் அச்ச நிலை உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி

முன்னாள் போராளி சுட்டுக்கொலை

Related Posts