மீண்டும் போலியோ சொட்டு மருந்து!

வாய்மூலமாக வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்தை இந்த மாதத்திற்குள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த போலியோ சொட்டு மருந்திற்கு வாய்மூலமாக வழங்கப்படும் சொட்டு மருந்து என்று பெயரிட்டுள்ளதாக தொற்றாநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடனே தெரிவித்தார்.

இதுவரையில் போலியோ தடுப்பூசி பாவிக்கப்பட்டதாகவும், எனினும் எதிர்வரும் காலங்களில் அதில் மாற்றம் கொண்டுவர எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் மீளவும் வாய் மூலமான போலியோ சொட்டு மருந்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் போலியோ வைரஸின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாகவும் தொற்றாநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடனே சுட்டிக்காட்டினார்.

Related Posts