மீண்டும் தேசிய அரசாங்கம்! – சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு

நாட்டில் மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி, சகல கட்சிகளையும் தமமுடன் இணைந்துகொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விசேடமாக அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டார்.

அத்தோடு, நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூட்டப்படுமென நம்புவதாகவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

இதேவேளை, உறுப்பினர்களை விலைக்கு வாங்க தமது அணி உத்தேசிக்கவில்லையென இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அத்தோடு, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையிலிருநது நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts