Ad Widget

மீண்டும் ஆஸ்கர் ரேஸில் ஏஆர் ரஹ்மான்

பீலே – பெர்த் ஆப் எ லெஜென்ட்’ படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

a-r-rahman-pele-759

மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் சினிமா, இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட்டிலும் முத்திரை பதித்தார். 2009-ம் ஆண்டு ‛ஸ்லம்டாக் மில்லினியர்’ என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெரும் புகழை தேடி தந்தார்.

தற்போது மீண்டும் அவர் இசையமைத்த படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரபல கால்பந்து வீரர் பீலேயின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‛பீலே – பெர்த் ஆப் எ லெஜென்ட்’ என்ற படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்தப்படத்தில் சிறப்பாக இசையமைத்தமைக்காக ரஹ்மான் பெயர் ஆஸ்கர் விருது பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்தாண்டு ஜன.,24-ம் தேதி ஆஸ்கர் பரிந்துரையின் இறுதிப்பட்டியல் தெரியவரும். தொடர்ந்து பிப்., 26-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும், அன்றைய தினம் யார் விருது பெற போகிறார்கள் என்பது தெரியவரும்.

ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கர் விருது கிடைக்குமா…?

Related Posts