Ad Widget

மின் கட்டணம் அறவிடுவதில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது இலங்கை

உலகின் மிகவும் அதிக மின்சாரக் கட்டணம் அறவிடும் நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்திலிருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட விரிவரையாளர் சிரிமல் அபேரட்ன தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், மலேசியா, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளை விடவும் இலங்கையில் மின்சாரக் கட்டணம் மிகவும் அதிகம் என தெரிவித்துள்ளார்.

உலகில் இத்தாலியைத் தவிர வேறு எந்த நாட்டிலும் மின்சாரக் கட்டணங்கள் உயர்வாக அறவீடு செய்யப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசியாவின் செல்வந்த நாடான சிங்கப்பூர், இரண்டாவது செல்வந்த நாடான ஜப்பான் ஆகியனவற்றில் செலவு மிக்க மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கட்டணங்கள் குறைவாகவே அறவீடு செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts