Ad Widget

மின்கம்பங்களை சேதமாக்கியவர்களிடமிருந்து 100.000 ரூபா வசூல்

ceylon_electricity_boardமின்கம்பங்களை சேதமாக்கிய வாகன உரிமையாளர்கள் இருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாவை வசூலித்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

லக்சபான நீர்மின்விநியோக உயர் அழுத்த மார்க்கத்தில் விபத்துக்களை ஏற்படுத்தியே மின்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு நட்டஈடாகவே இலங்கை மின்சார சபை குறித்த தொகையை அறவிட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் நுணாவில் சந்திப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கன்டர் ரக வாகனமொன்றும் அதே நாள் மாலை 07.10 மணியளவில் சாவகச்சேரி நகரப் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான பிக்கப் ரக வாகனமொன்றும் சாவகச்சேரி ஊடாக கரந்தன் வரை செல்லும் மின்சார சபையின் உயர்அழுத்த மின் கம்பங்கள் மீது மோதியதில் இரண்டு மின்கம்பங்களும் மீள பயன்படுத்த முடியாதளவுக்கு சேதமடைந்தன.

இந்த நிலையில் குறித்த தனியார் வாகன உரிமையாளர்களிடமிருந்தும் நட்டஈட்டு தொகை பெறப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts