Ad Widget

மின்கட்டணம், இயந்திர எண்ணெய் அடுத்த மாதம் விலை குறைப்பு

மின் கட்டணம் மற்றும் இயந்திரங்களை இயக்க பயன்படுத்தும் எண்ணெயின் விலை குறைக்கப்படவுள்ளதாக மின்வலு சக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தெமட்ட கொடயிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

palitha ranke bandara_CI.bmp

மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளதுடன் புதிதாக மின் இணைப்பு பெற்றுக்கொள்ளும் முறையும் இலகு வாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டம் வெற்றிப் பாதையில் பயணிக்கும் தருவாயில் பொது மக்களுக்கு அதிக சலுகைகளை வழங்கும் நோக்கிலேயே இவ்வாறு மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.

அத்துடன் இயந்திர எண்ணெயின் விலையும் விரைவாக குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரையில் மக்கள் மின் இணைப்புக்களை பெற்றுக் கொள்வதில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கட்டணம் செலுத்தியவுடன் அளவீட்டு மானி பொருத்தப்பட்டு விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும்.

அதன்போது மின் இணைப்பை பெறுவதற்காக தற்போது அறவிடப்படும் பணத்திலும் கணிசமான தொகை குறைக்கப்படும் எனவும் எதிர் வரும் மார்ச் மாதம் 6-ம் திகதியே இந்நட வடிக்கை அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இதுவரை மின் இணைப்பு பெறாதவர்கள் எதிர்காலத்தில் இணைப்பை பெற்றுக் கொள்வதற்காக மின்சார சபையுடன் தொடர்பு கொள்ள வேண்டியது மாத்திரமே,அதற்காக மின்சார சபையினால் நியமிக்கப்பட்டுள்ள குழு விரைவாக செயற்பட்டு மின் இணைப்பை பெற்று தரும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அது மாத்திரமல்லாது மின் கட்டணம் குறைக்கப்படும் சந்தர்ப்பத்தில் இயந்திர எண்ணெய்க்கான கட்டணமும் குறைக்கப்படும். இதனால் போக்குவரத்து மற்றும் கடல்சார் தொழில் செய்பவர்களும் நன்மையடைவார்கள் என இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த நாட்களில் தனியார் போக்குவரத்து சங்க உரிமையாளர்களின் சங்கம் இயந்திர எண்ணெய் விலை குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts