நெல்லியடிப் பழைய பேருந்து நிலையத்தின் சுவரில் எழுதப்பட்டிருந்த ‘நம்நாடு தமிழீழம்’ என்ற வாசகம் சுவரிலிருந்த சுவரொட்டிகள் உரிக்கப்பட்ட போது தென்பட்டுள்ளது.
மேற்படி பேருந்து நிலையத்தினை திங்கட்கிழமை (04) முதல் குஞ்சர்கடை எல்லாங்குளம் இராணுவ முகாமினைச் சேர்ந்த இராணுவத்தினர் துப்பரவு செய்து வருகின்றனர்.
இதன்போது, சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி உரிக்கப்பட்ட போது முன்னொரு காலத்தில் எழுதப்பட்டிருந்த மேற்படி வாசகம் தென்பட்டுள்ளது.
மேற்படி பேருந்து நிலையத்திற்கு வர்ணம் பூச்சும் நடவடிக்கையினையும் மேற்கொள்ளவிருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.