Ad Widget

“மனித உரிமைகள் – 365”

2014 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமைகள் நிகழ்வு யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (16) காலை 9.45 மணிக்கு நடைபெறவுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். கிளையின் இணைப்பாளர் த.கனகராஜ் திங்கட்கிழமை (08) தெரிவித்தார்.

human-kanakaraj

சர்வதேச மனித உரிமைகள் தினமானது இவ்வருடம் ‘மனித உரிமைகள்-365’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தால், ‘மீளிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதில் அரசியல்வாதிகள், கல்விமான்கள், நீதியாளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், சிவில் சமூகத்தினர், மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் பொறுப்பு’ எனும் தலைப்பில் சொல் அரங்கம் நடைபெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள் கே.ரீ.கணேசலிங்கம், மா.சின்னத்தம்பி, திருமதி கோசலை மதன், யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் எஸ்.கணேசமூர்த்தி, கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆசிரியர் எஸ்.லலீசன், முன்னாள் மாவட்ட செயலாளர் சி.பத்மநாதன், மனித உரிமை நிலையத்தின் இணைப்பாளர் த.சண்முகநாதன் ஆகியோர் இதில் கலந்து கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

Related Posts