Ad Widget

மகாபாரத கதைக்கு இளையராஜா இசை வடிவம் தர வேண்டும் – கமலஹாசன்

மகாபாரத கதைக்கு இளையராஜா இசை வடிவம் தர வேண்டும் என்று கமலஹாசன் பேசினார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசுவின் முதல் நான்கு பாகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் கமலஹாசன் பங்கேற்று நாவலின் முதல் பாகத்தை வெளியிட்டார். இரண்டாம் பாகத்தை இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டார்.

kamal-ilayaraja

விழாவில் கமலஹாசன் பேசியதாவது:–

மனிதர்கள் எல்லோரும் கதைகளால் பின்னப்பட்டு இருக்கிறார்கள். நாம் எல்லோருமே கதை கேட்பவர்களாக இருக்கிறோம். நமக்கெல்லாம் மதம் தேவையாக இருக்கலாம் அல்லது தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த மதங்களுக்குள் இருக்கிற கதைகள் நிச்சயம் தேவை.

இசை வடிவத்தில் சொல்லப்படுவதுதான் வேதங்கள். அதனால் சுருதி என்கிறோம். மகாபாரதத்தை ஜெயமோகன் நாவலாக எழுதி இளையராஜா அதை இசை வடிவத்தில் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டே இருப்பேன். வேறு எதுவும் தேவை இல்லை. நம் காலத்தில் வணங்கத்தக்க படைப்பாளனாக ஜெயமோகன் நமக்கு கிடைத்து இருக்கிறார்.

இவ்வாறு கமலஹாசன் பேசினார்.

விழாவில் இளைய ராஜா பேசும்போது, ‘‘மகாபாரத கதையை நாவலாக எழுதுகிற முயற்சிக்கு பெரிதும் உழைப்பு தேவை. ஜெயமோகன் பெரிய அளவில் உழைத்து நாவல்களாக எழுதுகிறார். மகாபாரதத்துக்கு நான் இசை வடிவம் கொடுக்க வேண்டும் என்பது மிகப்பெரிய உழைப்பை கோரும் பணியாக இருக்கிறது. ஆனாலும் அந்த பணியை செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கு வருகிறது’’ என்றார்.

Related Posts