Ad Widget

போயஸ் கார்டன் அலறல் சத்தம்!! அச்சத்தில் ஊழியர்கள்!!

ஜெயலலிதாவின் ஆன்மா பற்றி ஓபிஎஸ் சொன்னாலும் சொன்னார், போயஸ் கார்டன் வீட்டில் அலறல் சத்தம் கேட்கிறது, பொருட்கள் உருள்கின்றன என்று பீதியடைந்து போய் உள்ளனர் அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள். முதல்வர் பழனிச்சாமி இதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எதிரியை மன்னித்து விடுவேன்… துரோகியை விட மாட்டேன் இது ஜெயலலிதா ஸ்டேட் மென்ட். இதை அவர் மறைந்த பின்னரும் கடைபிடிக்கிறார் என்று அதிமுகவினரே நம்புகின்றனர்.

போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா ஆவியாக உலா வருகிறார் என்று சிலர் கிளப்பிவிடுகின்றனர். சிறுதாவூர், கொடநாடு பங்களாக்களிலும் அவர் ஆன்மா உலா வருகிறது என்றும் பற்ற வைக்கின்றனர்.

மதுரையில் நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய கர்நாடக மாநில புகழேந்தி, தெய்வம் வாழ்ந்த வீட்டில் கை வைத்தால் சும்மா விடுமா? ரத்தம் கக்கி சாவார்கள் என்று சாபம் விடாத குறையாக பேசி டிஆர்பியை ஏற்றி விடுகிறார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில், இரவு நேரத்தில் அலறல் சத்தங்கள் கேட்பதால் கார்டன் ஊழியர்கள் பீதியில் ஆழ்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த போது கலகலப்பாக காணப்பட்ட அந்த சாலையும், போயஸ் கார்டன் வீடும் இப்போது களையிழந்து விட்டது. அவருடன் வசித்த சசிகலாவும், இளவரசியும் இப்போது சிறையில் இருக்கின்றனர். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீடிக்கிறது என்று சிபிஐ விசாரணை கேட்கிறார் ஓபிஎஸ். அதையே பிளஸ் பாயிண்டாக வைத்து அவரின் ஆவி பழிவாங்கி வருவதாக, சில சாமியார்களும் கூறி பீதியை கிளப்பி விடுகின்றனர்.

ஜெயலலிதா இருந்தவரை அவருடன் இருந்தவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவரின் மரணத்திற்குப் பிறகு யாராலும் போயஸ் கார்டன் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் என்றைக்கு அமர்ந்தாரோ அன்றைக்கு பிடித்தது சனி. சசிகலாவும் இளவரசியும் இப்போது சிறையில் காலம் தள்ளுகின்றனர்.

சில நாட்கள் மட்டுமே போயஸ் கார்டன் வீட்டில் வசித்த டிடிவி தினகரனும் இப்போது சிறையில் காலம் தள்ளுகிறார். சசிகலா சிறைக்கு போன பின்னர் டிடிவி தினகரன் போயஸ் கார்டன் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்து அதிமுகவினரை சந்தித்தார். அங்கே நடைபெற்ற சில அமானுஷ்ய சம்பவங்கள் அவரை சொந்த வீட்டுக்கே ஓடிப்போக செய்து விட்டதாம்.

போயஸ் கார்டன் வீட்டில் ஒருநாள் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தங்கியிருந்த போதும் இதை உணர்ந்தாராம். பணியில் இருக்கலாமா வேண்டாமா என்று பலரும் யோசித்து வருகின்றனர். இந்த பீதி யாரை பயமுறுத்த என்ற சந்தேகம் பலருக்கும் எழாமல் இல்லை.

வேதா நிலைய பங்களாவில் ரகசிய அறைகளில் பொக்கிஷங்கள் குவிந்துள்ளன. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே ஒரு பகுதியை கன்டெய்னரில் வைத்து கடத்தி விட்டனர். கணக்கற்று கிடக்கும் சொத்துக்கள், பொக்கிஷங்களை கொள்ளையடிக்க நினைப்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா பழிவாங்கத் துடிப்பதாக கூறி வருகின்றனர்.

மதுரையில் பேசிய புகழேந்தியும் இதை உறுதி படுத்தும் விதமாகவே பேசினார். கொடநாட்டில் கொள்ளையடிச்சவங்க கதி என்னவாச்சு? அதே போல போயஸ் கார்டனுக்குள் நுழைந்து கை வைக்க நினைத்தால் அவர்களுக்கும் இதே கதிதான் என்று பேசியுள்ளார். இது யாருக்கு விடுத்த எச்சரிக்கை என்ற கேள்வி எழாமல் இல்லை.

போயஸ் கார்டன் வீட்டை அரசுடைமையாக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதித்தாலாவது ஜெயலலிதாவின் ஆன்மா அமைதியடையுமா? ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகும் அவரது ஆட்சி நடப்பதாக கூறி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இதற்கு என்ன பரிகார பூஜை செய்யப்போகிறார்?.

Related Posts