வடக்கு மாகாணத்தில் எதிர்நோக்கியுள்ள போசாக்கு அபாயம், சவால்கள், என்பவற்றை வெற்றி கொள்வதற்கு தற்போது அமுலில் உள்ள போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்களை விளக்குதல் மற்றும் விழிப்பூட்டுதல் நிகழ்வு நேற்று யாழ். பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
‘நாட்டிற்கு வெற்றி போசாக்கு நிறைந்த ஒரு தேசம்” என்ற தலைப்பில் போசாக்கிற்கான பன்முகச் செயட்பாட்டுத்திட்ட நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த நிகழ்வில் திட்டம் தொடர்பான அறிமுகம், இலங்கையின் தற்போதைய போசாக்கு நிலையையும் உலக போசாக்கு நிலைமையினையும் ஒப்பீடு செய்தல், மற்ற நாடுகள் மேற்கொண்ட வெற்றிகரமான திட்டங்களை எடுத்துக்காட்டல், தற்போது அமுலில் உள்ள முன்னோடி கருத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு என்பன இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.