Ad Widget

பொலிஸாருக்கு எதிராக 14 முறைப்பாடுகள்

வடமாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொலிஸாருக்கு எதிராக, பொதுமக்களால் 14 முறைப்பாடுகள் கடந்த 8 மாதங்களில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடமாகாண அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடமாகாண பணிப்பாளர் க.தியாகராஜா, புதன்கிழமை (03) தெரிவித்தார்.

பொய்யான வழக்கின் கீழ் கைது செய்தல், முறையான நடவடிக்கை எடுக்காமல் விடுதல், காரணம் குறிப்பிடாமல் கைது செய்தல், வழக்குப் பதிவு செய்யாமை போன்ற செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபட்டனர் என பொதுமக்கள் முறைப்பாடுகள் செய்துள்ளனர்.

அவற்றில் 8 முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வுகள் காணப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தீர்வு காணப்படவேண்டிய முறைப்பாடுகள் தொடர்பிலான அறிக்கைகள் அந்தந்தப் பொலிஸ் நிலையங்களில் இருந்து இன்னமும் கிடைக்கப்பெறவில்லையெனவும், கிடைக்கப்பெற்றதும் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

Related Posts