உலக சுற்று சூழல் தினத்தினை அனுஷ்டிக்கும் விதமாக யாழ். இராணுவத்தினரால் மாவட்டத்திலுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை இல்லாதொழித்தல் என்னும் தொனிப்பொருளில் கழிவகற்றல் நடவடிக்கை நேற்றய தினம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் ஒவ்வொரு இராணுவ முகாம்களையும் சேர்ந்த இராணுவத்தினர் ஈடுபட்டதுடன், கழிவுகளை வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்றனர்.
உலக சுற்றுச் சூழல் தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக இராணுவத்தினரால் விழிப்புணர்வு வாகனப் பேரணி ஒன்று கடந்த வியாழக்கிழமை (05) நடத்தப்பட்டதினைத் தொடர்ந்து சனிக்கிழமை (07) கழிவகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.