Ad Widget

பொது வேட்பாளரை ஆதரிப்பது குறித்து த.தே.கூ. இன்னமும் முடிவு எடுக்கவில்லையாம்!

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடக்கும் என நம்பப்படும் நிலையில். எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க தயாராகி வருகின்றன. ஆனால் யாரை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவுசெய்யவில்லை என்று கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

suresh

அந்த இதழில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் நாம் முஸ்லிம் காங்கிரஸுடன் உடன்படவில்லை என்றும், பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் எமது கட்சிக்குள் பிளவு என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால் நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனோ அல்லது எங்களுக்குள்ளோ வேறுபாடுகள் எவையும் இல்லை.

எங்கள் கூட்டமைப்பின் தலைவர் முக்கிய அரசியல்தலைவர்கள் பங்குபற்றிய கூட்டத்தில் பங்குபற்றினார். அதற்காக கூட்டமைப்பு பொது வேட்பாளரை தேர்வுசெய்வதாக அர்த்தம் இல்லை.

மேலும் தேசிய ஒருமைப்பாடு குறித்த கருத்துக்களில் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளதாகவும் கூறியதுடன், கூட்டமைப்பினர் பிளவுபட்டதாக மக்களிடம் கதைகள் கூறப்படுகின்றன. ஆனால் நாம் வலுவான சக்தியாக ஒருமைப்பாடுடைய சக்தியாகவே இருப்போம் – என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஷிராணி?

Related Posts