Ad Widget

புலிகள் மீதான தடை நீக்கத்தை அடுத்து படையினர் உஷார் நிலையில்!

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள புதிய சூழல் தொடர்பில் பாதுகாப்பு படைத்தரப்பு உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

ruwan-vanika-sooreyaa

கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியதை அடுத்து ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்கள் தொடர்பில் புலனாய்வுத்துறையினரும் கண்காணித்து வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கத்தால், மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீளக்கட்டியெழுப்பப்படுவதற்கு குறைந்தபட்ச வாய்ப்புகளே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பிரிவினைவாதிகளுக்கு வழங்கிவிடக் கூடாது என்பதால் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய அனைத்து பிரிவுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும் வணிகசூரிய தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கம் தற்காலிகமானதாகவே இருக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் நிரந்தரமாக நீக்கப்படுமானால் அது நாட்டின் அமைதிக்கு பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts