Ad Widget

பால்நிலை வன்முறைகளுக்கு பெண்களும் காரணம்

தனியார் பேருந்துகளில் இடம்பெறும் பால்நிலை வன்முறைகளுக்கு ஆண்கள் மட்டுமன்றி சில பெண்களும் காரணமாக அமைவதாக தனியார் பேருந்து இணையத் தலைவர் கெங்காதரன் தெரிவித்தார்.

இன்று காலை நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற பால்நிலை வன்முறைக்கு எதிரான கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பேருந்துகளில் இடம்பெறும் வன்முறைகளுக்கு சில பெண்களின் செயற்பாடுகளும் காரணமாக அமைகின்றன. எனவே பெண்கள் தமது பாதுகாகாப்புக்கு தாமே பொறுப்பு என தெரிவித்தார். இதேவேளை தவறுகள் இடம்பெறும் பொழுது தட்டிக்கேட்கும் நடத்துநர் மற்றும் சாரதிகளுக்கு விடுக்கப்படும் பயமுறுத்தல்கள் காரணமாக அவர்கள் தவறுகளைத் தட்டிக்கேட்கத் தயங்குகின்றனர். இதற்கு பொலிசாரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.

யாழ் சமூக சேவை மையத்தின் ஏற்பாட்டில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை பால்நிலை வன்முறைகளிற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் ஒன்று தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts