Ad Widget

பாலியல் குற்றம் செய்த சிறார் குற்றவாளிகளுக்கு தண்டனை விலக்கு தேவையா?

பாலியல் வல்லுறவு, கொலை போன்ற கொடூரமான குற்றங்களை புரியும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சட்டத்திலிருந்து பெறுகின்ற விலக்கு குறித்து உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமையன்று கேள்வி எழுப்பியதோடு இந்த சட்டத்தை மறுஆய்வு செய்வது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

indian_supreme_court

பாலியல் வல்லுறவு வழக்குகளில் குற்றம் புரியும் 18 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு சிறார் சட்டத்தின் அளிக்கப்படும் தண்டனைக்கு பதிலாக வயது வந்தோருக்கு வழங்கப்படும் தண்டனைக்கு ஒப்பாக தண்டனை அளிக்கப்படுவதற்கு தான் ஆதரவு அளிப்பதாக கடந்த ஞாயிற்று கிழமையன்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்திருந்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பெரும்பாலானவை 16 முதல் 18 வயது வரை உள்ளவர்களால்தான் நடக்கிறது என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர் என்றும், சிறார் சட்டம் இருப்பதையும், அதனால் குறைந்த தண்டனையோடு தப்பி விடலாம் என்றும் தெரிந்தே பலர் இந்தக் குற்றங்களை செய்கின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டில் தில்லியில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின் இறந்து போன சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்த ஒரு குற்றவாளி, குற்றம் புரியும்போது 18வயதிற்கு கீழ் இருந்ததால், அவருக்கு சிறார் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 3 ஆண்டு காலத்திற்கு சீர்திருத்த முகாமுக்கு அனுப்பப்படும் தண்டனையே வழங்கப்பட்டது.

இந்த தண்டனை பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளை எழுப்பியது.

Related Posts