Ad Widget

பாப்பரசரின் மடு விஜயம்: மன்னார் ஆயருடன் பொலிஸ்மா அதிபர் பேச்சு

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கும் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கும் இடையில் விசேட சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

பாப்பரசர் பிரான்சிஸ் பதினாறாம் பெனடிக், எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி மடு திருத்தலத்துக்கு வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் ஆராயும் வகையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

2(3533)

மடு திருத்தலத்துக்கு வருகை தந்த பூஜித ஜெயசுந்தர, ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை மற்றும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை ஆகியோரை சந்தித்து உரையாடினார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ள பாப்பரசர் மறு நாள் 14ஆம் திகதி மன்னார் மடுத்திருத்தலத்துக்கு வருகை தரவுள்ளார்.

இந்தச் சந்திப்பில், வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருடன் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சரத்குமார ஜோசப், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த ரூட்ரிகோ, தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் போது மடுத்திருவிழாவுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சகல விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த குழுவினர் மடு ஆலயத்துக்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். பின் ஆலய பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நிலமைகளையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts