Ad Widget

பாதுகாப்பு தரப்பினரின் உத்தரவுக்கு அமையவே யாழ்.பல்கலைக்கழகம் பூட்டப்பட்டது- அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

inter-university-studens-federationபாதுகாப்பு தரப்பினரின் உத்தரவுக்கு அமையவே யாழ்.பல்கலைக்கழகம் பூட்டப்பட்டது என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வைகாசி மாதம் 12 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினை மூடுவதற்கு அரசாங்கமானது முடிவெடுத்துள்ளது. அதனைப்பற்றி வினவும்போது,

அரச அதிகாரிகளும் பாதுகாப்பு பிரிவினரும் இந்த முடிவானது பல்கலைக்கழக நிருவாகத்தினால் எடுக்கப்பட்ட சுயாதீன முடிவாகும் என கூறுகின்ற போதிலும் அது பாதுகாப்பு பிரிவினரால் எடுக்கப்பட்ட முடிவேயாகும் என இன்றும் தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.

இவ்வேளையில் பல்கலைக்கழகமானது மூடப்பட்டது முதற் தடவையல்ல அத்துடன் இதற்கு முதலும் அவர்களின் அவசியமான வேளைகளில் பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதற்கு பாதுகாப்பு பிரிவினரின் தலையீடு இருந்தது என்பதும் எமக்கு விளங்காத இரகசியம் அல்ல.

ஒருபுறம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் காரணமாகவும் அத்துடன் மறுபுறம் மீண்டும் மீண்டும் இனவாத அடிப்படையில் சிங்கள தமிழ் மக்களிடையில் எதிரிகளாக மாற்றும் காரணத்தினாலுமாகும்.

யுத்தமென்பது எந்த அடிப்படையில் பார்த்தாலும் அது யுத்தமேயாகும். அது பெறுமதியான மனித வாழ்வினை பல்லாயிரக்கணக்காக அழித்தொழிப்பதாகும்.

இந்த உயிர்கொல்லும் யுத்தத்திற்கு பொறுப்பேற்க வேண்டியது இறுதியில் ஆயுதமேந்தி ஒருவரையொருவர் கொன்ற அப்பாவி மக்களல்லவே தவிர யுத்தத்திற்கு வழி வகுத்த இனவாத ஆகமவாத மற்றும் தம் பலம் கொண்டு பலாத்காரமாக செயற்படும் முதலாளித்துவ நிருவாகிகளேயாகும்.

வேதனைப்படுவதற்கும் அவர்களை நினைவு கூருவதற்கும் அந்த எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமை சிங்கள மக்களைப்போல தமிழ் மக்களுக்கும் இருக்கின்றது என ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தமானது இரு பிரிவினருக்கிடையில் அல்லது பற்பல பிரிவினருக்கிடையில் நிகழும். அந்த அனைத்து பிரிவுகளிலும் தமது பக்கம் நின்று கொலை செய்பவன் வீரனென்றும் மற்றவன் துரோகியென்றும் கொள்ளப்படுகின்றது. சிங்கள மக்களுக்கு கொலை செய்யும் ஒரு தமிழ் போராளி துரோகியாகும் வேளை சிங்கள போராளி வீரனாகின்றான்.

தமிழர்களுக்கு தமிழ் போராளி வீரனாகும் வேளை சிங்கள போராளி துரோகியாகின்றான். உண்மையான துரோகிகள் இவர்கள் யாருமல்ல, அனைத்து மக்களிடமும் கொள்ளையடித்து உண்ணும், தன்னுடன் உள்ளவர்களுக்காக இனவாத, ஆகமவாத அத்துடன் எந்தவொரு வர்க்கவாதிகளும் பொதுமக்களுக்கு உரிமையானவற்றை கொள்ளையடித்து அவர்களை யுத்தத்தினுள் தள்ளுகின்ற அவர்களே ஆகும்.

யுத்தத்திற்குள் தள்ளப்படுகின்ற சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ளாமல் இருந்தால் நிருவாகிகள் செயற்படும் இந்நிலைமைகள் மாறப்போவதில்லை.

இந் நிலைமை மாறவேண்டின் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரது உரிமைகளையும் ஏற்றுக்கொண்டு எல்லோரும் சமமாக ஒன்றாக செயற்பட வேண்டும்.

அதனால் நாம் மனிதாபிமானமாக செயற்படுகின்றோமானால் நாம் அமைதியாக மனப்பூர்வமாக வைகாசி 18 அன்று சிங்கள மக்களுக்கு தம் உறவுகளை நினைவு கூருவதற்குள்ள உரிமை தமிழ் மக்களுக்கும் உள்ளதென்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts