Ad Widget

பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை தாக்குதல்

பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியதாக ராணுவ அதிகாரி ரண்பிர் சிங் தெரிவித்துள்ளார்.

run-bber-sing-india

இந்திய விமானப்படை தளங்களில் இருந்து புறப்பட்ட விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாதிகள் முகாமில் பெரும் சேதம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இந்த திடீர் தாக்குதலில் முகாமில் பயிற்சியில் இருந்த தீவிரவாதிகள் பலர் உயிரிழந்துவிட்டதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை என்றும் ரன்பிர் சிங் அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 20 தீவிரவாத முயற்சிகளை முறியடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எல்லைக்கு அப்பால் இருந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்றும், உரியில் ராணுவ முகாம்களில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் வகையில் இந்திய ராணுவம் தயாராக உள்ளதாக உறுதிபட தெரிவித்துள்ளார்.

கார்கிலுக்கு பிறகு தாக்குதல்:

1999-ல் நடந்த கார்கில் போருக்கு பின் பாகிஸ்தான் மீது தற்போது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. உரி ராணுவ முகாமை பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானிலிருந்து இயங்கி வரும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி இந்திய தரப்பு அதிரடியாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 பாகிஸ்தான் வீரர்கள் பலி

இந்திய விமான படை நடத்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

Related Posts