Ad Widget

பஸ்கள் , ரயில்களில் இன்றும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள்!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் முன்னெடுக்கப்படும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் இன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ்களில் ஒரு வார காலத்திற்கு 24 மணித்தியாலங்களுக்கும் கிருமி ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனைத் தவிர முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை அணியுறுமாறு பஸ் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு 400 ரயில்மேடைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான 5700 இற்கும் மேற்பட்ட பஸ்களில் 24 மணித்தியாலங்களும் கிருமி ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts