Ad Widget

பண்ணையில் நேற்றும் பொலிஸ் பாதுகாப்பு 10 பேருந்துகளே சேவையில்

பண்ணை தனியார் பேருந்து தரிப்பிடப்பகுதியில் நேற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.யாழ்ப்பாணம்-கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளில் அதிகமானவை அனுமதிப்பத்திரம் இன்றியே சேவையில் ஈடுபடுகின்றன.

jaffna bus 444s

இவ்வாறு ஈடுபடும் பேருந்துகளில் 6 பேருந்துகள் போக்குவரத்து பொலிஸாரிடம் கடந்த சனிக்கிழமை கொழும்பில் சிக்கின.

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதி உள்ள பேருந்துகளையும் செல்ல விடாது பண்ணை பேருந்து தரிப்பிடத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இதனையடுத்து நேற்றுமுன்தினம் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகருக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

அதன் போது புதன்கிழமை வரை பொறுமையாக இருக்கு மாறும் போக்குவரத்து அமைச் சருக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்வு கிடைக்கும் என டி.ஐ.ஜி உறுதிய ளித்திருந்தார்.

எனினும் நேற்றுமுன்தினம் இரவு தங்களையும் சேவையில் ஈடுபட அனுமதிக்க வேண் டும் என்று கோரியதுடன் பேருந்து ஒன்றும் இனந்தெரியாதவர்களால் கல்வீச்சுக்கு இலக் காகி அதில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குறித்த நடைமுறை தொடர்கின்ற நிலையில் நேற்றும் போக்குவரத்து பொலிஸார் மற்றும் சாதார பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

அத்துடன் தேவையற்றவர்களின் பிரசன்னத்தை தவிர்ப்பதற்கு கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அனுமதிப்பத்திரம் உள்ள பேருந்துகள் மட்டும் தரிப்பிடத்திற்குள் எடுக்கப்ப ட்டதுடன் 10 பேருந்துகள் மாத்திரமே நேற்று சேவையில் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை, போக்குவரத்து அமைச்சரை இன்று சந்திக்கும் நோக்குடன் பேருந்து உரிமையாளர்கள் கொழும்புக்கு செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts