Ad Widget

நைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்ஷலுக்கு எபோலா ஏற்றம்

நைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்ஷல் ஒருவருக்கு மர்மமனிதன் ஒருவன் எபோலா வைரஸ்சை ஊசி மூலம் செலுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க ஏர் மார்ஷல் ஒருவர் நைஜிரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள லகோஸ் வானூர்தி நிலையத்தில் இறங்கியுள்ளார்.

அதன்போது மர்ம மனிதன் ஒருவன் எபோலா வைரசை ஊசி மூலம் ஏர் மார்ஷலுக்கு செலுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளான்.

இந்த நிலையில், குறித்த ஏர் மார்ஷல் அமெரிக்காவுக்கு உடனடியாக தனி வானூர்தியில் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டு அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், குறித்த ஏர் மார்ஷலுக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இதுவரையில் தென்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அவர் தொடர்ந்து சோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts