இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் முதலாம் பிரிவு கால்பந்தாட்டப் போட்டியில் தனது கன்னி முயற்சியிலேயே நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனானது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பதுளை தர்மதூத்த கல்லூரியை 4 – 3 என்ற பெனல்டி முறையில் நெல்லியடி மத்திய கல்லூரி வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது
இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி 70 நிமிட முழு நேரத்தின்போது 1 – 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது.
இதனை அடுத்து மத்திஸ்தரினால் அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் 3 – 2 என நெல்லியடி மத்திய கல்லூரி வெற்றி பெற்று சம்பியனானது.
16 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் முதலாம் பிரிவு கால்பந்தாட்டப் போட்டி நெஸ்ட்லே லங்கா பிஎல்சியின் மைலோ அனுசரணையுடன் நடத்தப்பட்டது.