Ad Widget

நாடாளுமன்றில் பிரதி அமைச்சர் பிரபா – தமிழ்க் கூட்டமைப்பினர் கடும் வாக்குவாதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதியமைச்சர் பிரபா கணேசனுக்கும் இடையில் நாடாளுமன்றில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

நாடாளுமன்றில் இடம்பெற்ற தகவல் தொழில் நுட்ப அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின்போதே இந்தத் தர்க்கம் ஏற்பட்டது.

இந்த விவாதத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர் பிரபா கணேசன், தான் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்ததாகவும், அங்கு மட்டக் களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆயிரம் ரூபாவைக்கூட ஒதுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து எழுந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோர் நாம் நிதி ஒதுக்கவில்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா என சவால் விட்டனர்.

இதன்போது இரு தரப்பினருக்குமிடையில் கடும் வாய்ச்சண்டை ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பக்கத்திலிருந்து ‘துரோகி’ என்ற கோஷம் எழுப்பப்பட்டது.

பிரபா கணேசனுக்கு ஆதரவாக ஆளுந்தரப்பு எம்.பிக்கள் குரல் கொடுத்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் பொன்.செல்வராசா எம்.பி. மிகவும் ஆவேசப்பட்ட நிலையில், பிரபா கணேசனுடன் உரத்த குரலில் தர்க்கப்பட்டார்

Related Posts