Ad Widget

நல்லை ஆதீனத்தை சந்தித்தது ஐரோப்பிய குழு

சேர்ச் ஒவ் ஸ்கொட்லாந்து மற்றும் வேள்ட் மிசன் கவுண்சில் ஆகியவற்றை சேர்ந்த மூவரடங்கிய குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு நல்லை ஆதீன முதல்வரைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட குழு நல்லை ஆதீனகுரு முதல்வர் , சின்மய மிசன் சைத்தணிய சுவாமி, மற்றும் சர்வமத குழுவினரையும் சந்தித்து தற்போது இங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போது குறித்த குழுவினருக்கு இராணுவ தலையீடு நிறுத்தப்பட்டு சிவில் நடைமுறை அமுல்ப்படுத்தப்பட வேண்டும், உயர் பாதுகாப்பு வலையத்தில் இருக்கும் இந்து ஆலயங்களை விடுவிக்க வேண்டும், மீள்குடியேற்றம் , காணி அபகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் யுவதிகள் தொடர்பிலும் எடுத்துக் கூறப்பட்டது.

Related Posts