Ad Widget

நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு தென்பகுதியில் சந்தை வாய்ப்பு

வடமாகாணத்திலுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு, தென்பகுதியில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

deneeswaran

வடமாகாணத்திலுள்ள நன்னீர் மீன்பிடி சங்கத்தினர் தமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு உதவி புரிய வேண்டும் என என்னிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தனர்.

அந்த கோரிக்கைக்கு அமைவாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து, 6 மில்லியன் ரூபாவை, வடமாகாணத்திலுள்ள குளங்களில் மீன்குஞ்சுகள் விடுவதற்கும் 1 மில்லியன் ரூபாவை குளங்களில் இறால் குஞ்சுகள் விடுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்தேன் என்றார்.

அதற்கமைய வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட நன்னீர் மீன்பிடி சங்கங்களின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட குளங்களில் குஞ்சுகள் விடப்பட்டு வருகின்றன.

விடப்பட்டன மீன்கள் குஞ்சுகள் வளர்ந்ததும் அதனை நன்னீர் மீன்பிடியாளர்கள் பிடிக்கும் போது, அந்த மீன்களுக்கான சந்தை வாய்ப்புக்களை தென்பகுதியில் ஏற்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு என்பன தொடர்ந்து வரும் 4 மாதங்களில் அதிகரிக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts