வடமராட்சி பகுதியில் உள்ள வீதியோரங்களில் காணப்படும் நடைபாதை வியாபாரிகளினால் தாம் மிகவும் பாதிக்கப்படுவதாக நகர வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் வியாபாரிகளே கடை வாடகை,பிரதேச சபை,நகர சபை என்பவற்றிற்கு வரி செலுத்துவது,மின்கட்டண செலவு,தொழிலாளர் சம்பளம் என்பவற்றினால் குறைந்த விலைக்கு பொருட்களை விற்கமுடியாது திண்டாடுகின்றனர்.
தென்பகுதியில் இருந்து வருகை தரும் நடைபாதை வியாபாரிகளினால் தாம் பாதிப்படைவதாக தெரிவித்து யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அண்மையில் ஓர் போராட்டம் நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.