தொலைபேசிக் கட்டணம் 17 சத வீதத்தால் உயர்வு!

புதிய வற் வரி மீளாய்வின் காரணமாக தொலைபேசிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுவந்த 25 சதவிகித வரி 42 சத வீதமாக அதிகரிக்கப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொலைபேசிகளுக்கான தற்சமயம் அறவிடப்படும் தொலைத்தொடர்பு வரியான 25 சதவீதம் எதிர்வரும் மே மாதம் முதல் மேலும் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதுடன் மேலும் இரண்டு சதவீதம் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியாகவும் அறவிடப்படும்.

சகல நிலையான தொலைபேசிகள், வீட்டுத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் இந்தப் புதிய வரிக்கு உட்படுத்தப்படும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது

Related Posts