Ad Widget

திருமலையில் பள்ளிவாசல் தரைமட்டம்

கிண்ணியா பகுதியிலுள்ள பழைமை வாய்ந்த கரிமலையூற்று பள்ளிவாசல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 1880 களுக்கு முன்னர் நிர்மணிக்கப்பட்ட கரிமலையூற்று ஜும்ஆ பள்ளிவாசல் நேற்று காலை இராணுவத்தினரால் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு யுத்த நிறைவைத் தொடர்ந்து இராணுவத்தேவை கருதி கரிமலையூற்று மக்களை குறித்த கிராமத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றி வெளியிடங்களில் குடியேறுமாறு பணித்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த பள்ளிவாசலும் 2009 முதல் இயங்காமலே காணப்பட்டது. பல அரசியல் பிரமுகர்கள் குறித்த பள்ளிவாசல் விடயத்தில் நல்ல தீர்வைப் பெற்றுத்தருவோம் என வாக்குறுதியளித்திருந்த நிலையில் நேறறு இப்பள்ளிவாசல் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகத்தினர் கிண்ணியா பொலிஸில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.

Related Posts