Ad Widget

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகள்

இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்புவதற்கு விரும்புவதாக இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் நிறுவுனர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்தகிள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்தியா, தமிழக அரசு, இலங்கை ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அகதிகள் தாயகம் திரும்பவேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை எழுப்பியமை பற்றி சந்திரசேகரன் தெரிவிக்கையில், ‘இலங்கைத் தமிழர்கள் தங்கள் மண்ணைக் காக்க விரும்புகின்றனர். அகதிகள் என்பதிலிருந்து விடுபடவேண்டும் என்று விரும்புகின்றனர்’ எனவும் கூறினார்.

மேலும், இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தான் கலந்தாலோசித்ததாகக் கூறிய சந்திரசேகரன், இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தனக்கு எழுதியிருந்த கடிதத்தில், மறுகுடியமர்வு விடயத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் தாங்களாக மனமுவந்து தாயகம் திரும்புவது மிக முக்கியமானது என்று கூறியதாக தெரிவித்தார்.

‘தெரியாத இடத்தில் வாழமுடிந்தவர்களுக்கு தங்களின் சொந்த மண்ணில் புதிய வாழ்வைத் தொடங்குவது பிரச்சினையாக இருக்கப்போவதில்லை. ஆனால், இந்திய, இலங்கை அரசுகளின் ஆதரவு தேவை’ என்றார்

Related Posts