Ad Widget

தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம் !பிரித்தானிய உளவுத்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக ரஷ்யாவின் கடுமையான அழுத்தத்தின் கீழ் உக்ரைனிய பாதுகாப்பு படைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட்டில் தீவிரமான சண்டைகள் தொடர்வதால் கடுமையான அழுத்தத்தில் உக்ரைனிய பாதுகாப்பு படைகள் இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தனது அறிக்கை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் சமீபத்திய புதுப்பிப்பில், ரஷ்ய இராணுவம் மற்றும் வாக்னர் குழுவின் கூலிப்படை போராளிகள் நகரின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

மேலும், உக்ரைன் எலைட் யூனிட் மூலம் வலுவாக இருக்கும் அதே வேளையில், பாக்முட்டிலிருந்து Kyiv-க்கு இருக்கும் மறு விநியோக வழிகள் “பெருகிய முறையில் குறைவாகவே உள்ளன” என்றும் உளவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Posts