வல்லாரை, பீற்றூட், கரட் ஆகியவற்றில் அப்பளம் தயாரித்த தமிழ்ப் பெண்ணுக்கு புதிய உற்பத்தியாளர் விருது கடந்த சனிக்கிழமை கொழும்பில் வைத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்வினால் வழங்கப்பட்டது.
புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ் சாயிராணி என்னும் பெண்ணுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
புதிய கண்டுபிடிப்பாளர்களாக நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 24 பெண்களில் இவர் ஒருவரே தமிழ்ப் பெண் ஆவார். இவரால் உற்பத்தி செய்யப்பட்ட அப்பளம், பச்சை, சிவப்பு, மஞ்சள் ஆகிய வர்ணங்களில் கடைகளில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.