தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று சனிக்கிழமை அந்தக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாளில் தெரிவுசெய்யப்பட்டனர்.

mavai mp in

இதன்படி தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, செயலாளராக கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த துரைராஜசிங்கம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

அந்தக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவராக பொன். செல்வராஜா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

உப தலைவர்களாக திருகோணமலையைச் சேர்ந்த துரைரட்ணசிங்கம், அம்பாறையைச் சேர்ந்த தோமஸ் வில்லியம், வவுனியாவைச் சேர்ந்த ப.சத்தியலிங்கம், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான எஸ்.பரஞ்சோதி, ஏ.எம்.இமாம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

கட்சியின் துணைச் செயலாளராக எம்.ஏ.சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்னர்.

தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர்களாக அனந்தி சசிதரன், பேராசிரியர் நாச்சியார் ஆகியோர் தெரிவாகினர்.

நிர்வாகச் செயலாளராக சி.குலநாயகம் தெரிவு செய்யப்பட்டார். சட்டத்துறை செயலாளராக சி.தவராசா நியமிக்கப்பட்டார். அரசியல் செயற்குழுத் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவானார்.

இளைஞர் அணி செயலாளராக சி.சிவகரன் தெரிவுசெய்யப்பட்டார். கொள்கைப் பரப்புச் செயலாளராக கிளிநொச்சியைச் சேர்ந்த எஸ்.வேளமாலிகிதன் தெரிவுசெய்யப்பட்டார்.

Related Posts