Ad Widget

தமிழரசுக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு செப்ரெம்பர் மாதம் வவுனியாவில்!

mavai mp65 வருட காலமாக வடகிழக்கு மக்களின் தாய்க் கட்சியாக இருந்து செயற்பட்டுக்கொண்டு வரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு வவுனியாவில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 5,6,7, ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை ஒட்டி தமிழரசுக் கட்சியின் கிளைகளை பிரதேச மட்டத்தில் புனரமைக்கும் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.

தேசிய மாநாட்டின் நிகழ்வுகளில் முதலாவது நாள் நிகழ்வு 5ஆம் திகதி மாலை ஏற்கனவே உள்ள மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறும் மறுநாள் 6ஆம் திகதி காலை 9.30இற்கு புதிய செயற்குழு கூடும் அதன் பின்னர் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுவர். பின்னர் அன்று மாலை 3.30இற்கு தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி, மகளிர் அணிகளின் மாநாடு இடம்பெற்று, மாலை 6.30இற்கு இலக்கிய அணியின் மாநாடும், கலைநிகழ்வுகளும் நடைபெறும்.

7ஆம் திகதி முற்பகல் 9.30 இற்கு பிரதிநிதிகள் மாநாடு இடம்பெறும் இந்த பிரதிநிதிகள் மாநாட்டில் புதிய நிர்வாகிகளை அங்கீகரிக்கும் அடுத்த மாநாட்டு பிரேரணைகள் தீர்மானிக்கப்படும்.

அதேதினம் பிற்பகல் 4 மணிக்கு பொது மாநாட்டுத் தீர்மானங்கள், பிரகடனங்கள் என்பன அறிவிக்கப்பட்ட பின்னர் பகிரங்கக் கூட்டம் நடைபெறும். இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகள், மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றும் நிகழ்வும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts