Ad Widget

தமிழக மீனவர்கள் வேலை நிறுத்தம்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடல் படையினரின் அத்துமீறல்களைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

கோட்டைபட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து சுமார் 250 விசைப்படகுகள் மூலம் சுமார் ஆயிரம் மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைகடல் படையினரின் அத்துமீறல்களைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20-ம் திகதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கோட்டைப்பட்டினம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து மீனவர்கள் சங்கத்தினர் கூறியது. இலங்கை கடல்படையினர் தமிழக மீனவர்களை கடுமையாக தாக்கியும், படகுகளையும் சேதப்படுத்தியும் வருவது கண்டிக்கத்தக்கது. மேலும், அவர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

அரசு வழங்கும் மானிய விலை டீசலின் அளவை அதிகரிக்க வேண்டுவது என்பழ உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தி ஜூலை 20ம் திகதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தப் போராட்டத்தில் இறங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனனர்.

Related Posts