Ad Widget

தனியார் வகுப்புகளுக்கு தடை

இவ்வருடம் 2014ஆம் ஆண்டுக்கான க.பொ.சதாரண தரப்பரீட்சைக்காக தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள் இன்று புதன்கிழமை (03) நள்ளிரவுடன் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09) க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், மாணவர்களுக்கான க.பொ.சாதாரண தர அனுமதி அட்டைகள், அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனியார் பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டைகள் அவர்களது சொந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், பாடசாலை பரீட்சாத்திகள் 370,739பேரும் தனியார் பரீட்சாத்திகள் 206,481பேரும் என மொத்தமாக 5,77,220 மாணவர்கள், இம்முறை சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இதற்கும் மேலதிகமாக சிறப்பு தேவையுடைய மாணவர்கள் 475 பேரும் கைதிகள் 19 பேரும் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இவர்களுக்காக, நாடளாவிய ரீதியில் 4,279 பரீட்சைகள் மையங்களும் 532 இணை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் வகுப்புகள் இன்றிலிருந்து பரீட்சைகள் நிறைவடையும் வரையிலும் தொடர்ந்து நடைபெறுமாயின், அண்மையிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. பரீட்சாத்திகள், பரீட்சை மையங்களில் கணினி கருவி, அலைபேசி மற்றும் பரீட்சை தொடர்பான எந்த பொருட்களையும் பரீட்சை மையங்களுக்கு எடுத்துச் செல்வதை கடுமையாக தடை செய்துள்ளோம்.

மேலும் தற்போது மழை மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகள், பரீட்சைக்கு தோற்ற முடியாமை தொடர்பாக இதுவரை எதுவித முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts