Ad Widget

தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் 27 வருடங்களின் பின் யாழ்ப்பாணம் திரும்புகிறார்

இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக ஆரம்பகாலத்தில் போராடியவர் தந்தை செல்வநாயகம் அவர்கள். 1983 ம் ஆண்டு தொடக்கம் இந்தியாவில் தங்கியிருந்த இவரது மகன் எஸ்.சி.சந்திரகாசன் 27 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இலங்கை செல்ல முடிவெடுத்துள்ளார்.இலங்கை தமிழர்களின் உரிமைக்காக ஆரம்பகாலத்தில் போராடியவர் செல்வநாயகம். இவரால் தொடங்கப்பட்ட பெடரல் கட்சி தமிழர்களுக்கு சம உரிமை கேட்டு பல போராட்டங்களை நடத்தியது.

1947 முதல் 1977 வரை யாழ்ப்பாணத்தில் இவரது வீடு மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டது. ஈழ அரசியல் தொடர்பான எந்த முடிவும் இங்குதான் எடுக்கப்பட்டது.இவரது மகன் எஸ்.சி.சந்திரகாசன் ஒரு வழக்கறிஞர். தந்தையின் வழியை பின்பற்றி இவரும் ஈழமக்களுக்காக போராடினார்.

ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பை தொடங்கி பணியாற்றி வந்தார். ஈழத்தில் வன்முறை அதிகரித்தபோது 1983 ஆகஸ்டு மாதத்தில் சென்னைக்கு வந்தார். கடந்த 27 ஆண்டுகாலமாக சென்னையிலேயே வாழ்ந்து வருகிறார்.இவரது மனைவி நிர்மலாவும் ஒரு வழக்கறிஞரே. இவர் கொழும்பு சட்ட பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார். 27 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சந்திரகாசன் இலங்கை செல்ல முடிவெடுத்துள்ளார்.

Related Posts